முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை: கர்நாடக முதல்வர்

தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார். கர்நாடக முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜிநாமா செய்யப்போவதாக வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் இதுகுறித்து ஹூப்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் எந்த வெளி நாட்டுக்கும் பயணம் செய்யவில்லை. கர்நாடகத்தில் புதிய முதல்வர் என்ற கேள்விக்கே இடமில்லை. டாவோஸில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.