மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெடலில் இன்று புதன்கிழமை  பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியானதோடு 25 பேர் காயமடைந்தனர். பின் விபத்து நடந்த பகுதியின் காவல் நிலைய பொறுப்பாளர் சுனில் லாடா , ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென வளைவில் ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.