இன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (டிச.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 718 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,27,635-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36,492ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,82,943ஆக அதிகரித்துள்ளது.