நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
