சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள உள்ள இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.