நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார்.

வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மற்றும் உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கத்தில் ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.