மைனர் பெண்ணை காதல் செய்வதாக கூறி  ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாகரசம் பேட்டை தெருவை சேர்ந்த விஜய் வயது 22 என்ற வாலிபர் என்ற வாலிபர் அதே தெருவை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதல் செய்வதாக கூறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். பெண்ணின் பெற்றோர்கள் தங்களுடைய மகள் காணாமல் போனதைப் பற்றி பதறிப்போய் தங்கள் மகள் கடத்தப்பட்டதாக நாச்சியார் கோவில் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண்ணும் அந்த வாலிபரும் இருக்கும் இடமறிந்து அவர்கள் பெற்றோர் அவர்களை அழைத்து வந்து வழக்கறிஞர் மூலம் காவல்நிலையத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் காவல்துறையினர் மைனர் பெண்ணை கடத்தியதாக விஜய் மீது போக்சோ சட்டம் பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.