இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,01,397 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 750 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,21,021-ஆக அதிகரித்துள்ளது. ஒருநாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,388-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,76,017-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,206-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,248 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு நாளில் மட்டும் 107 பேர் குணமடைந்துள்ளனர்.