இன்று தமிழகத்தில் மட்டும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,19,515-ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,361-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,74,327-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,00,998 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.