இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-17 வகை விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-17 வகையிலான ஹெலிகாப்டரானது வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறங்க விமானி முயன்றார்.

அப்போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. லோகித் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.