ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதலால் 19 பேர் பலி

உலகம் முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். காபூலில் இரண்டு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் படுகாயமடைதுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.