ரஜினியின் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சினிமா முக்கிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.