ஜெய் பீம் டிரைலர் வெளியீடு

சினிமா முக்கிய செய்திகள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நான்கு படங்களைத் தயாரித்து அனைத்தையும் அமேசான் வெளியீடாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். அதில் ’இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாளும்’ ‘உடன் பிறப்பே’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து ’ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

’ஜெய் பீம்’ படத்தை ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.