அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மனு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தலைமை செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்:
 
பெண்களுக்கு எதிரான இணைய தள குற்றம் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களை தடுக்க கராரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் சமந்தாமான விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும். தொலைக்காட்சி மூலமாக ஆன்லைன் வகுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
 
பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி உள்ளாட்சிகள் தோறும் கிராம பெண்கள் குழந்தைகள் பாதுகாபுகுழு அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சானிடரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் இவற்றை பரிசீலிப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.