தமிழக வீராங்கனைகளுக்கு அரசு வேலை: விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் தனலட்சுமி மற்றும் சுபா வெங்கடேசனுக்கு நாடு திரும்பியவுடன் அரசு வேலை.

சென்னை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வதமாக *வென்று வா வீரர்களே* எனும் ட்விட்டர் ஹேஷ் மற்றும் பாடலை முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களுடன் துணை நிற்பது மட்டுமல்லாமல் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 25 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு

இந்த பாடலுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழக வீரர்கள் வெற்றியோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் 4 ஒலிம்பிக் மண்டலங்கள் துவக்கப்பட்டு 6 முதல் 16 வயதுள்ளோர்க்கு பயிற்சி அளித்து வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்துவதே அரசின் இலக்கு.

தமிழகத்தில் இருந்து தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் தனலக்ஷ்மி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு அரசு பணி ஆணையை தமிழக முதல்வர் வழங்க உள்ளார்.