வேலூர் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திடீர் சோதனை

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் வேலூர் டிஎஸ்பி (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.

ஆய்வின் போது சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. வேலூர் மத்திய சிறையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிறப்பு போலீசார் ஆய்வு நடத்த உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியானது.

இதனால் உஷாரான கைதிகள் செல்போனை மறைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் போலீஸ் அதிரடி ஆய்வில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.