சிறப்பு கட்டுரை: கடைச் சொல்

Triplicane Times முக்கிய செய்திகள்

கலந்தர் ஹாரீஸ்

ஆதியிலே வார்த்தை இருந்தது,
அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,
அந்த வார்த்தை தேவனாக இருந்தது..
என்கின்றது பைபிள் …

மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே வார்த்தைகள் தோன்றிவிட்டது.. மனிதர்கள் மட்டுமன்றி இந்த உலகில் கானும் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே வார்த்தைகள் தோன்றியதாக,
கூறுகிறது பைபிள்

ஒருவர் பிறந்ததிலிருந்து இறப்பை நோக்கிய பயணத்தில் அவருக்கு நிழலாகவும், துணையாகவும் வருபவை சொற்கள், மொழிகள்,
சொற்கள் மனத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.,
நல்ல சொற்கள் ஆன்மாவின் ஆடையாகவும்,
தீய சொற்கள் மனத்தின் வெறுமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது..

வாள் தொடுத்து போர்க்களம் புகுந்த வரை காட்டிலும்,
கன்னி அவள் வாய்மொழியா வார்த்தையினை செவியுறுத் தானே காத்திருக்கின்றன பல காளைகள், வார்த்தைகளும் ஆயுதங்கள்,
மனதை வதைப்பதனால்.

காதலியிடமிருந்து கேட்கப்படும் “சம்மதம்” என்னும் ஒற்றைச் சொல்லுக்காக காலமெல்லாம் காத்திருக்கிறான் காதலன்,
இன்றும் குடும்ப உறவுகளில் கோபத்தை வெளிப்படுத்த அவர்கள் ஏந்தும் ஆயுதம் மௌனம்.அதாவது வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி…

சொற்களின் எண்ணிக்கையைக் கொண்டே மொழியின் பழைமையை வகுக்கின்றன மொழியியலாளர்கள். எனவேதான் நம் சொற்களின் வழமையையும், மொழியின் புலமையையும் அறிந்த முற்கால பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர், சங்கத்தை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று கால அளவில் மூன்றாக வகைப்படுத்தினர் புலவர்கள்.

முதற் சங்கத்திலும், இடைச் சங்கத்திலும் தமிழர்களின் அக வாழ்க்கை, புற வாழ்க்கைப் பற்றிய நூல்கள் தோன்றின. கடைச் சங்கத்தில் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்ற நீதி இலக்கிய நூல்கள் தோன்றின, வாழ்க்கை நெறியை பேசியன முதலிரு சங்கங்கள், வாழ்வின் தத்துவத்தை பேசியது கடைச் சங்கம்..

கடைச் சங்கம் என்றால் இறுதி சங்கம் என்று பொருள்,
கடைச் சொல் என்றால் இறுதி வார்த்தை என்று பொருள்.

தேடல்களையும், லட்சியங்களையும் வாழ்வின் பாதையாக கொண்ட
மனிதன், தன் வாழ்வின் இறுதி நேரத்தில் பேசும்” கடைச் சொல்” அவன் ‌கடந்த காலத்தைக் காட்டவள்ளது…

நாம் அறிந்த தத்துவவாதிகள், ஞானிகள்,, புரட்சியாளர்கள், அரசியல்வாதிகள், விடுதலை போராளிகள், தலைவர்கள் தங்கள் மரணத்தருவாயில் பேசிய வார்த்தைகளை ” கடைச் சொற்களை”
அறிந்து கொள்வோம்…

தொடர்ந்து பயணிப்போம்…