சூடானில் நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது

கார்ட்டூம்: சூடான் தலைநகரான கார்ட்டூமில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு அந்த பயணிகள் விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, கடந்த புதன்கிழமை கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுமார் 30 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் நுழைந்த விமானிகள் மீது பாய்ந்து அந்த பூனை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார், பூனை பயணிகள் விமானத்தின் விமானிகளுக்கான அறையில் பதுங்கி இருந்துள்ளது. மட்டுமின்றி அது மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டுள்ளது, தொடர்ந்து பூனையை வெளியேற்றிய பின்னரும் இரவு முழுவதும் அந்த விமானம் புறப்படாமல் தாமதமானதாக தகவல் வெளியானது.உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலின்படி, துப்புரவு அல்லது பொறியியல் மதிப்பாய்வின் போது பூனை விமானத்தினுள் புகுந்து பதுங்கியிருக்கலாம் என கூறினர்.