கொரோனா தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் ஏற்படவில்லை – மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன்

புது டில்லி: இந்தியாவில் போடப்படும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை என நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்த வேண்டுமென பிரதமர் எங்களிடம் கூறுவார், இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியதாவது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதனால் நாங்கள் பிரமருக்கு நன்றி கூறுகிறோம், அவர் கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். விஞ்ஞான ரீதியாக கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட பின்பும், அதற்கு எதிராக தவறான தகவல்கள் பரவின, அதற்கான பதிலை பிரதமர் தற்போது அளித்துள்ளார் என நினைக்கிறேன், தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை தடுப்பூசி போட்டுக் கொண்டபின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.0004 ஆகும். இது மிகக் குறைவான பாதிப்பாகும், இவ்வாறு அவர் கூறினார்.