சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்

புது டெல்லி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ந்தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது, காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல் பின்வருமாறு, * காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது, காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது, காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும், தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும், தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறித்தி உள்ளது.