புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது – பிரதமர் மோடி

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது முன்னாள் முதல்வருக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா, ஆகியவற்றில் புதுச்சேரி சிறந்து விளங்கும், முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது. அடுத்து அமையப் போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது. மக்கள் சுதந்திரத்தை உணர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் மேலிட உத்தரவு படி இயங்கிய அரசு புதுச்சேரியில் அனைத்தையும் அழித்தது, புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் தேர்தல் வாக்குறுதி. வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றின் மையம் புதுச்சேரி, முதல்வர் மீது பெண் ஒருவர் குறை சொன்ன வீடியோவை தேசமே பார்த்தது ஆனால் முதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறினார். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் இடையூறாக இருந்தது. ஜனநாயக விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பார்கள் காஷ்மீரில் கூட தேர்தல் நடந்த நிலையில், புதுச்சேரியில் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மோடி, புதுச்சேரியின் மாண்பை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள், இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.