பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா? – மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

புது டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து மக்களை திணறடித்து வருகிறது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் இருப்பதால், விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்காரணம் என மத்திய அரசு கூறி வருகிறது, இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் தொடர்ந்து பெட்ரோலிய உற்பத்தியை தொடர்ந்து குறைத்து வருகின்றன. உற்பத்தி குறைவால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது, பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜிஎஸ்டி கவுன்சில்தான் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.