சட்டபேரைவையில் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

சென்னை: 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார், அதன் விவரம், * பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு * பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு, * சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு * ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு, * வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும், *குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும், * நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும், * உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு, * சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு, * கைத்தறி துறைக்கு 1,224 கோடி ஒதுக்கீடு, * மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம், * காவல்துறையை நவீனமயப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு, இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு, * மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு, * 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும், மேலும் டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதியுதவி செய்துள்ளோம். கோவை மெட்ரோ ரயில் திட்டம்-சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.