எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் – நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கு நாராயணசாமி சென்றார் அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார், ராஜினாமா கடித்தை அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள், நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்றார்.