இலங்கை இந்தியாவிடம் இருந்து ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்குகிறது

கொழும்பு: இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 400-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அங்கு இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொண்டு ஏற்கனவே தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்கள பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களும் தடுப்பூசி பெற்று வருகின்றனர். இந்த பணிகளுக்காக இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை இலங்கை வாங்குகிறது. இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது, இது ஒருபுறம் இருக்க, இலங்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தடுப்பூசி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசி தருவதாக உலக சுகாதார அமைப்பு வாக்களித்து இருக்கிறது, மேலும் சீனாவும், ரஷியாவும் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி தானமாக வழங்க முன்வந்துள்ளன. இதைப்போல இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா மற்றும் ரஷிய ராணுமும் தடுப்பூசி உதவி அளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.