அமெரிக்காவில் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்

நியூயார்க்: அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போர்ட் வொர்த் நகரில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது, அவற்றில் சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், 18 சக்கரங்களை கொண்ட லாரிகள் உள்ளிட்டவையும் அடங்கும். இதனால் சாலையில் போக்குவரத்து முடங்கியது. 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதலில் சிக்கி கொண்டன, இந்த விபத்திற்கு பனி படர்ந்து காணப்படும் சாலையும் ஒரு காரணம் ஆக இருக்க கூடும் என சி.என்.என். தெரிவித்தது. அமெரிக்க தேசிய தட்பவெப்ப சேவை அமைப்பும், பனி குவியலால் சாலைகள் வழுக்கி செல்லும் வகையில் உள்ளன என்றும் அதனால் அந்த பகுதியானது குளிர்கால அறிவுறுத்தலுக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்திருந்தது, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது. 36 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பணிக்கு சென்று கொண்டிருந்த 3 போலீஸ் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் இதில் சிக்கி கொண்டுள்ளனர், இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 24 தீயணைப்பு வாகனங்கள் சென்றன. விபத்தில் பலர் சிக்கி கொண்டனர். பல கார்கள் உயர பறந்தன. வாகனங்கள் மோதி கொண்ட வேகத்தில் அவை ஒன்றின் மீது ஒன்றாக கிடந்தன. அவற்றில் இருந்த நபர்களை மீட்கும் பணி தொய்வடைந்துள்ளது.