ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்

வெனிஸ்: அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது, ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது, நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது 4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினால் பாதிப்பு இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஆய்வக பரிசோதனையில் தூய தண்ணீரில் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.