பசுக்களுக்கான ஜோடிகளை தேர்ந்தெடுக்க ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் தொடக்கம்

இந்தியா முக்கிய செய்திகள்

போபால்

இந்தியாவில் அண்மைக் காலமாக மாடுகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை சில மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன, உத்தர பிரதேசத்தில் பசுக்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மேலும் குளிர் காலத்தில் பசுக்களை பாதுகாக்க மாடுகளுக்கு கம்பளி போர்வைகள் போர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் காளைகள் குறித்த விவரங்களை பதிவு செய்து இணையதளம் ஒன்றை அந்த மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு துறை வெளியிட்டுள்ளது, அந்த இணையதளத்தில் காளைகளின் புகைப்படம், குறியீட்டு எண், இனம், மரபணு கோளாறுகளுக்கான சோதனை செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன, cssbhopal.com என்ற அந்த இணையதளம் வாயிலாக விவசாயிகள் தங்கள் பசுக்களுக்கான இணை காளை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் போல் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.