சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த திருநங்கை கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

அதன்பேரில், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (22.10.2019) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பழையபங்களா தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு திருநங்கை ஒருவர் ரகசியமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திருநங்கை குணா (எ) சித்ரா, வ/30, த/பெ.வெங்கடேசன், எண்.283, அன்னை சத்யாநகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குணா (எ) சித்ரா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.