போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா

தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். இந்த படத்தில் கதையை கேட்டதும் நயன்தாரா ஒப்புக்கொண்டார். இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதலில் கீர்த்தி சுரேஷை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். ஆனால் படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியாததால் நயன்தாரவை தேர்வு செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கும், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ள தர்பார் படமானது பொங்கலுக்கும் வெளிவரவுள்ள நிலையில், நயந்தாரா ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் விதத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ள தகவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.