சென்னையின் மெரினா மாலில் டாய்ஸ் “ஆர்” அஸ் – ன் இரண்டாவது ஸ்டோர் ஆரம்பம்

ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ரீடெய்ல் துறையில் ஒரு முன்னணி குழுமமான டேப்லெஸ், சென்னையில் தி மெரினா மாலில் உலகளவில் பிரபல ரீடெய்ல் டாய் (விளையாட்டு பொம்மைகள்) பிராண்டான டாய்ஸ்“ஆர்”அஸ் என்பதன் இரண்டாவது ஸ்டோரை இன்று
தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் தொடங்கி வைக்கப்பட்ட இதன் முதல் ஸ்டோருக்கு கிடைத்த பிரமாண்டமான வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது ஸ்டோராக இது திறக்கப் பட்டுள்ளது டேப்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அதீப் அஹமது, பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் இந்த புதிய ஸ்டோரை திறந்து வைத்தார்.

இந்த ஸ்டோரின் பேபிஸ்’ஆர்”அஸ் என்பதும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய மற்றும் பிரசவத்திற்காக காத்திருக்கின்ற தாய்மார்கள், இளம் பெற்றோர;கள் கண்டிப்பாக வருகைத்தந்து பார்வையிட வேண்டிய இடமாக இது இருக்கிறது. தங்கள் பச்சிளம் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதற்கு பெற்றோருக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இங்கு கிடைக்கின்றன.

பயணம் மற்றும் பாதுகாப்பிற்கான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான சாதனங்கள் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பிற்கான பொருட்கள், பேபிஸ் ‘ஆர்”அஸ் – ன் பிரத்யேக பிராண்டுகளான கார்ட்டரஸ் மற்றும் ஓஸ்கோஸ் பிராண்டுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆடைகள் முதலான வற்றை இந்த ஸ்டோர் கொண்டிருக்கிறது.