அ.ம.மு.க-வை விட்டு விலகும் எண்ணம் இல்லை : நடிகர் ரஞ்சித் விளக்கம்

நடிகர் ரஞ்சித் பிப்ரவரி 27-ந் தேதி பா.ம.க.வில் இருந்து விலகி தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் அ.ம.மு.க.வில் இருந்தும் வெளியேறுகிறார் என்று இணையதளங்களில் செய்தி பரவியது.

இது குறித்த நடிகர் ரஞ்சித் முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில் கடந்த ஒரு வாரமாக என்னைப் பற்றி வந்த செய்திகள் சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் அ.ம.மு.க.வில் தான் இருக்கிறேன். நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. அதனால் எந்தவித ஏமாற்றமும் அடைய வில்லை. தினகரனின் தலைமையை விரும்பி தான் வந்தேன். எனவே அ.ம.மு.க-வை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.