பிரியங்கா சோப்ரா வெட்டிய கேக்கின் விலை எத்தனை லட்சம் என்று தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது 37-வது பிறந்தநாளை தனது கணவர் நிக்ஜோனஸ் உடன் கொண்டாடினார். இவர் தனது பிறந்தநாளிற்காக மியாமியில் தனது கணவருடன் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதில் இன்னும் சுவாரசியமான தகவல் என்ன வென்று பார்த்தல் பிரியங்கா வெட்டிய கேக்கின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 5 அடுக்குகள் கொண்ட அந்த கேக்கானது சிவப்பு நிற பிரத்யேக கிரீமும், மேலே தங்க துகள்கள் தூவப்பட்டு இருந்தது விலை ரூ.3.5 லட்சம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.