பார்வதி மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் உடலுறுப்பு மீட்பு

மருத்துவம்

விபத்து காரணமாகக் கணுக்கால் மற்றும் வலது காலில் கடுமையான காயங்களால் ஏற்பட்ட கூட்டு எலும்பு முறிவுக்குச் சிக்கல் நிறைந்த புதுமையான ஒற்றை அறுவை சிகிச்சையை இலவச மாகவும், வெற்றிகரமாகவும், நடத்தி முடித்துள்ளதாகச் சென்னை பார்வதி மருத்துவமனை அறிவிக்கை விடுத்துள்ளது. இந்தச் சிக்கல் நிறைந்த மற்றும் அறுவை சிகிச்சையை 33 வயது நோயாளிக்குச் சென்னை பார்வதி மருத்துவமனை முடநீக்கியல் துறை இயக்குனர் டாக்டர் தர்மராஜ் தலைமையிலான குழு செய்து முடித்தது. இதன் மூலம் அவரது உடலுறுப்பு இயக்கத்தை மீட்டெடுத்ததுடன் இயல்புப் பணிக்குத் திரும்பவும் உதவியுள்ளது.

கனரக வாகன ஓட்டுனரான திரு ஆல்பட்டுக்கு ஏற்கனவே ஒரு விபத்தின் போது வலது இடுப்பு மூட்டு, வலது காலில் கூட்டு எலும்பு முறிவு மற்றும் மற்றும் கணுக்காலில் பன்மூட்டு முறிவு ஏற்பட்டுள்ளன. மேலும் நரம்பு காயம் காரணமாக மரத்துப் போன நிலையில் காலையும், கணுக்காலையும் அசைக்க முடியவில்லை

முடநீக்கு மருத்துவர் குழு நோயாளியை உடனடியாகப் பரிசோதித்து அவரது இடுப்பு மூட்டுக் கிண்ணக் குழுவில் அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தது. தொடர்ந்து காயம் மற்றும் சருமத்தை மூட ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. நோயாளிக்குக் காய மேலாண்மை முழுமையடைந்த பின்னர் சிக்கலான மற்றும் புதுமையான டிபியோடேலோ கால்கெனால் (டிடிசி) ஃப்யூஷன் நெயில் ஒற்றை அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.