ஐஸ்அவுஸ் பகுதியில் கஞ்சா போதையில் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய நபர் கைது.

தமிழ்நாடு

சென்னை, இராயப்பேட்டை, சைவ முத்தையா 1வது தெரு, எண்.7/4, என்ற முகவரியில் வரதராஜ், வயது 54, என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20.04.2019 அன்று இரவு 10.30 மணியளவில் சைவ முத்தையா 6வது தெருவில் தனது ஆட்டோவை (பதிவு எண்.TN 06-B-9387) நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைக்கப்பட்டும், மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களையும் யாரோ உடைத்து சேதப்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வரதராஜ் டி-3 ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. டி-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் (எ) குபேந்திரன், என்ற 19 வயது நபரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நரேஷ் (எ) குபேந்திரன் கடந்த 20.04.2019 அன்று இரவு கஞ்சா போதையில், தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1 ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே இ-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நரேஷ் (எ) குபேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.