ஆவின் பால் அட்டை வழங்கும் நடைமுறை மாற்றம் புதிய நடைமுறை அறிமுகம்

ஆவின் மாதாந்திர பால் அட்டை விநியோகத்தில் இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது இனி மாதம் தோறும் 16 ஆம் தேதிக்கு பிறகு மாதாந்திர பால் அட்டை வாங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் பால் விநியோகம் செய்யப்படுகிறது சில்லறை விலையை விட குறைந்த விலையில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதம்தோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதந்திர பால் அட்டைகளை வாங்குகின்றனர் பால் அட்டைதாரர்கள் பிரதி மாதம் 16 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை பால் வாங்குகின்றனர், மாதாந்திர அட்டைகள் 30 நாட்கள், 25 நாட்கள், 20 நாட்கள் என மூன்று விதமாகவே வழங்கப்படுகின்றன பெரும்பாலானோர் 30 நாட்கள் அட்டையையே வாங்குகின்றனர் 1-ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதிக்குள் வாங்கி விட வேண்டும் 14 ஆம் தேதி கெடுவை தவறிவிடுவோர் 17 ஆம் தேதி அன்று அல்லது 25 ஆம் தேதி அட்டைகளை வாங்க முடியும் 20 நாட்கள் மற்றும் 25 நாட்கள் அட்டையை வைத்து டெலிவரி செய்வோர் குளறுபடி செய்வதாக தகவல் வந்துள்ளது அதனால் இனிமேல் 17 ஆம் மற்றும் 25 ஆம் தேதி வழங்கப்படும் அட்டையை ரத்து செய்யும் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதனால் மாதாந்திர பால் அட்டை வாங்குவோர் 14 ஆம் தேதிக்குள் கார்டு வாங்குவது கட்டாயம் ஆகியுள்ளது.