ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

முக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வெல்டர், பிட்டர், மெஷினிஸ்ட் பிரிவுகளில் காலியாக உள்ள 71 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலியிட விபரம், வெல்டரில் 26, பிட்டரில் 38, மெஷினிஸ்டில் 7ம் சேர்த்து மொத்தம் 71 இடங்கள் உள்ளன, வயது, விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், கல்வித்தகுதி, பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற டிரேடு படிப்பை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும், தேர்ச்சி முறை, எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க கடைசி நாள் 20/12/2018, மேலும் விரிவான விபரங்களுக்கு: http://www.bheltry.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.