பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

முக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சுருக்கமாக பீ.பி.சி.எல். (BPCL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கெமிஸ்ட் டிரெயினி, ஆபரேட்டர் டிரெயினி, ஜெனரல் ஒர்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், பணியிடங்கள் வாரியாக காலியிட விவரம், ஜெனரல் ஒர்க்மேன் (கெமிக்கல்) – 63, மெக்கானிக்கல் – 32, இன்ஸ்ட்ருமென்டேசன் – 17, கெமிஸ்ட் டிரெயினி – 13, ஆபரேட்டர் டிரெயினி – 12 பேர், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2018-ந் தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.எஸ்.சி. வேதியியல் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி 26-11-2018 மேலும் விவரங்களுக்கு http://www.bharatpetroleum.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.