முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாபெரும் கலை போட்டிகள் துவக்க விழா நடந்தது

கல்வி முக்கிய செய்திகள்

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் கலையார்வத்தைத் தூண்டும் வகையில் முன்னெடுத்த மாபெரும் கலை வளர்ச்சிப் போட்டிகள் (17.11.18) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, மிகப்பெரும் கலைக்கண்ணோட்டமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட (நகைச்சுவை) நடிகர் திரு, சதீஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பள்ளிக் கல்வியுடன் மாணவர்கள் தம் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் உலக அமைதி மற்றும் தண்ணீர் சேமிப்பு பற்றிய சமூக அக்கறையையும் தனது உரையில் வெளிப்படுத்தினார். அவரது சொற்பொழிவு மாணவர்களின் கலைப்பயணத்திற்கு ஒரு படிக்கல்லாக அமைந்தது.

பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார்  7000 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர், கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், குறியீட்டு வரைபடம், முதலான போட்டிகள் இதில் இடம்பெற்றிருந்தன. சுமார் 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைப்பசிக்கு விருந்தளிக்கும் நிகழ்வாக இது அமைந்தது.