ஆத்விக் கிட்ஸ் கிங்டம் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கல்வி முக்கிய செய்திகள்

திருவல்லிக்கேணி செல்ல பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆத்விக் கிட்ஸ் கிங்டம் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேரு போல் வேடமணிந்த மாணவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் பாடி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பல்வேறு துறையை சார்ந்த அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக ட்ரிப்ளிக்கானே டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் பாக்யராஜ் மழலைகளின் உருவம் பதித்த ஸ்டாம்ப்களை வெளியிட்டார். அவரை தொடர்ந்து டாக்டர். கலைச்செல்வி குழந்தைகள் உடல்நலனில் மிகவும் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்கமளித்தார். மற்றுமொரு சிறப்பு விருந்தினராக காருண்யா ஹக்கீம் நுர்சரி அண்ட் பிரைமரி பள்ளியின் முதல்வர் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நேரத்தினை செலவிட வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தார். பின்னர் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் அரும்புகள் திருக்குறள் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மழலை பாடல்கள் பாடி திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் பல மாணவர்கள் காய்கறிகள் போன்ற தோற்றத்தில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். முன்னதாகவே குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே நடைபெற்ற வண்ணம் தீட்டுதல் மற்றும் பாடல்கள் பாடுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.