முதன்முதலாக திருநங்கைகளுக்கு அரசு வேலையை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை காவல்துறையையே சேரும்,காவல் ஆணையர் பெரியய்யா IPS பெருமிதம்

மாவட்டம் முக்கிய செய்திகள்

கோவை மாநகர காவல் துறையும் கோயம்புத்தூர் தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து  திருநங்கைகளை தொழில் முனைவோராக ஆக்கும் விழா.நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காவல்துறை ஆணையர் பெரியய்யா IPS கலந்து கொண்டார்.இவ்விழாவில் 60 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்ய  மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள தள்ளுவண்டிகள் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.துணை ஆணையர் லட்சுமி IPS பேசும்பொழுது மாநகர ஆணையரிடம் திருநங்கைகளுக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தும் டிராபிக் வார்டன்  வேலை வழங்க சிபாரிசு செய்து உள்ளேன். வெகு விரைவில் அதற்கான முயற்சியை ஆணையர் எடுப்பதாக கூறியுள்ளார் ,ஏற்கனவே கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளுக்கு சுயமாகத் தொழில் செய்ய ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.இன்று அவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையை அடைந்தது மட்டுமல்லாமல், ஒரு மதிப்புமிக்க நபராக வலம் வருகிறார்கள்.உங்களுக்குக்  காவல்துறையும், கோவை தெற்கு ரோட்டரி கிளப்பும்ஒரு நல்ல  சுயமாக சம்பதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை நல்ல முறையில் பயண்படுத்தி வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைய வேண்டும், நாங்கள் நீங்கள் செய்யும் தொழிலை ஆறுமாதம் கண்காணித்து மிகச் சிறப்பாகவும், திறம்படவும் யார் நடத்துகிறார்களோ அவர்களுக்கு சிறப்பு பரிசுகளை காவல்துறையின் ஆணையர் மூலம் கொடுக்கப்படும் என்றார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை ஆணையர் பெரியய்யா IPS பேசும்பொழுது சமுதாயத்தில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நபராக நமது நாட்டில் உள்ளனர்.

குற்றங்கள் எந்த சூழ்நிலையில் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்தியாவில் திருநங்கைகள் முதன்முதலாக அரசு வேலையில் சேர்ந்தது காவல் துறையில் தான்.அதற்கு அடுத்தபடியாக நீதித்துறையில் எனவே முதன்முதலாக திருநங்கைகளுக்கு அரசு வேலையை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை காவல் துறையையே சேரும். இங்கு வந்துள்ள திருநங்கைகள் அனைவரும் பாதியில் விட்ட படிப்பை தொடர வேண்டும், அந்த படிப்பின் மூலம் அவர்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் தற்போது வழங்கப்பட்டுள்ள சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்.மேலும் நவம்பர் மாதம் 100 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்ய தெற்கு ரோட்டரி கிளப் சார்பாக வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் கோவை தெற்கு ரோட்டரி கிளப்பின் தலைவர் கிருஷ்ணகுமார்,நிகழ்ச்சியின் இயக்குனர் சுவாமிநாதன்,செயலாளர் பாலசுப்பிரமணியன்,பொருளாளர கல்யாண் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் பேராசிரியை ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் , இமயம் பெண்கள் பாதுகாப்பு காப்பத்தின் நிருவனர் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தார் விழாவை துணை கமிஷனர் சுந்தர்ராஜன் மற்றும் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர் இவ்விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரளாக கலந்து கொண்டனர் இவ்விழாவில் சிறப்பம்சமாக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதத்தையும் திருநங்கைகள் பாடியது அனைவரையும் வியப்புகுள்ளாக்கியது.