ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வாங்கி அறிவிப்பு 

இந்தியா முக்கிய செய்திகள்
ஊதா நிறத்தில் குஜராத் பாரம்பரிய சின்னத்துடன்,புதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கான மாதிரி நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது, இந்த புதிய 100 ரூபாய் நோட்டில் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய சின்னமான ராணி கி வாவ் படம் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லுபடியாகும்,புதிய நோட்டில் 100 எனும் வார்த்தை தேவநாகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும், ரூபாய்நோட்டின் பின்புறத்தில் இடதுபுறத்தில் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு, ஸ்வச் பாரத் ஸ்லோகன் ஆகியவை இடம் பெற்று இருக்கும் ரூபாய்நோட்டின் முகப்பில் வாட்மார்கில் ரூ.100 என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். நடுப்பகுதியில் மகாத்மா காந்தியின் உருவமும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். வலது புறத்தில் அசோக ஸ்தூபியும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலின் கையொப்பமும் இருக்கும்.