காவல்துறை ஆதரவுடன் திருட்டுதனமாக செயல்பட்டு வரும் மதுபான பார், பொதுமக்கள் ஆவேசம்

கோவை போத்தனூர் – செட்டிபாளையம் செல்லும் சாலையில் வடிவு நகர் அருகே உள்ள பாலாஜி நகரில் குடியிருப்புக்கு மத்தியில் அனுமதி இல்லாமல் மதுபார் கடை நடத்திவந்துள்ளனர். இதனால் இப்பகுதில் தினமும் குடித்துவிட்டு அந்த வழியே செல்லும் பெண்களை கிண்டல் செய்வதும்,தவறாக நடக்க முயற்சி செய்வதும் தினமும் நடந்துவருகிறது. இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் வெளியே  வரவே பயப்படும் நிலை உள்ளது. இதனல் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர், மற்றும் SP யிடமும் மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மதுபார்முன் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு கடைமுன் ஆர்பாட்டம் நடத்தினர்.தகவல் அறிந்த காவல்துயினர் குவிக்கப்ப நிலையில் ,ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  பெண்களிடம் பேசியபோது ” சார் இந்த பகுதில்  லட்சுமி நகர், வடிவுநகர், பாலாஜி நகர், அன்புநகர் உள்பட்ட 10 க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது, இதில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறோம், இங்கு லட்சுமி நகரில் மிகவும் புகழ்பெற்ற பாபா கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு செல்ல இந்த மதுபார் கடைவழியாகத்தான் செல்லவேண்டும், இங்கு டாஸ்மாக் கடையை எடுக்கசொல்லி ஒரு வருடம் முன் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆர்பாட்டம் செய்தால் அந்த கடையை அகற்றிவிட்டனர், ஆனால் கடையுடன் செயல்பட்டு வந்த பார்கடையை இப்பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் திருட்டுதனமாக மதுபாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து வருகிறார், இதுகுறித்து பலமுறை காவலநிலையத்தில் புகார்செய்தும் நடவடிக்கை எடுகவில்லை, ஆனால் புகார்செய்த எங்களை சாந்தமணி பெண் உதவிஆய்வாளர் எங்களை மிரட்டி வருகிறார். அதுமட்டுமின்றி அந்த திருட்டுத்தனமாக பார் நடத்தி வரும் பாண்டியனுக்கு ஆதவரவாகவும் செயல்பட்டு வருகிறார். இங்கு அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது, இரண்டு நாட்களுக்கு முன் பாபா கோவிலுக்கு சென்ற பெண்னிடம் குடித்துவிட்டு வந்த நபர்கள் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இது பற்றி சாந்தமணியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். குடியிருப்புக்கு மத்தியில் காவல்துறை துறை ஆதரவுடன் செயல்பட்டு வரும் இக்கடையை உடனே அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு அதிரித்து வரும் நிலையில் ஏன் புகார்கொடுத்தும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி?