சீன கப்பல் : இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை

உலகம் முக்கிய செய்திகள்

இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகக் கூறப்பட்டது.

சீனா இதனை ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இந்த கப்பலால் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.

கொழும்பில் இருந்து கொண்டு இந்தியாவைச் சீனா கண்காணிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.