வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். நாளை (28-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான […]

Continue Reading

கிராமசபை கூட்டங்கள் இனி 6 முறை நடைபெறும்

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராமசபை கூட்டங்கள் இனி 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவ.1-ம் தேதி‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும் […]

Continue Reading

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை […]

Continue Reading

விடைபெறும் அக்னி நடசத்திரம்

பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வெயிலால் கடும் அவதியடைந்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நாளை (28-ந்தேதி) விடைபெறுகிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. அக்னி […]

Continue Reading

தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது. இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு […]

Continue Reading

பிரதமரின் சென்னை வருகை – என்னென்ன நிகழ்ச்சிகள்?

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து […]

Continue Reading

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மாற்றம்!!

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு கண்ணன் மாற்றப்பட்டுள்ளார். தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஜூனியர் விகடன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்ணன் ஐபிஎஸ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதன் காரணமாகவே அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணனுக்குப் பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். […]

Continue Reading

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை..!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் இன்று […]

Continue Reading

பிரதமர் சென்னை வருகை – தமிழில் ட்வீட் போட்ட ஆளுநர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வரும் நிலையில், அவரை வரவேற்கும் விதமான ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ட்வீட் செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் […]

Continue Reading

தங்க தாலி, சீர்வரிசை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

9 ஏழை ஜோடிகளுக்கும் தலா ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், மிகவும் பாழடைந்து கிடந்த மாநகராட்சி மண்டபத்தை நான் தான் சீரமைத்தேன் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மண்டபம் புனரமைப்புக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை போராடி வாதாடி வென்றோம் […]

Continue Reading