MS தோனியின் சர்ப்ரைஸ் விசிட்

சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தோனியை பார்த்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர் மிகவும் எளிமையாகவும், பழுகுவதற்கு இனிமையான […]

Continue Reading

ஐபிஎல் 2022 – மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய பெங்களூரு அணி

டி-20′ கிரிக்கெட் லீக் தகுதிச் சுற்று-2ல் பட்லரின் கலக்கல் சதத்தால் ராஜஸ்தான் அணி இறுதி போட்டியில் நுழைந்துள்ளது. இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என காத்திருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு அந்த அணி மீண்டும் ஏமாற்றத்தையே தந்தது. பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இந்நிலையில் நடப்பு […]

Continue Reading

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் : இறுதியில் பிரக்ஞானந்தா…!

16 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செஸ் போட்டிகளில் தனது அபார திறமையின் வழியாக உலகையே வியப்புக்குள்ளாக்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் Chessable Masters Tournament முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென்னைத் தோற்கடித்தார். அதன் காலிறுதி போட்டியில் சீனாவின் வெய் யி-யை (Wei Yi) தோற்கடித்தார். இந்நிலையில் நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி […]

Continue Reading

வரும் நவ.20-ம் தேதி சென்னையில் தோனிக்கு பாராட்டு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு […]

Continue Reading

அனுஷ்காவுடன் வீகன் உணவகத்துக்குச் சென்ற கோலி

இந்தியா – இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள டெண்ட்ரில் கிச்சன் என்கிற வீகன் உணவகத்துக்கு மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகாவுடன் சென்று மதிய உணவருந்தியுள்ளார் கேப்டன் கோலி. மிகச்சிறந்த வீகன் […]

Continue Reading

தங்க மகன் நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை

டோக்கியோ டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் […]

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்

டோக்கியோ டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா. இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் […]

Continue Reading

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார்

டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா. அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில் லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

டோக்கியோ  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து (6) சீன தைஃபேயின் தை சூ-யிங்கை (2) எதிர்கொண்டார் இந்த போட்டியின் முதல் செட்டில் பி.வி. சிந்து ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்திய காரணமாக 18-21 என்ற கணக்கில் முதல் செட்டில் தோல்வி அடைந்தார். 2 செட்டில் தொடக்கத்தில் இருந்தே தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்தினார். இடைவேளையின் போது 11-6 என்ற கணக்கில் முன்னிலை […]

Continue Reading

இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி

டோக்கியோ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதற்கிடையே இன்று நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார். இதில் இந்தியாவின் மேரி கோமை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கொலம்பியாவின் விக்டோரியா காலிறுதிக்கு தகுதி பெற்றார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற […]

Continue Reading