பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் அப்னா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்சில் 1990-ம் […]

Continue Reading

உக்ரைனின் தற்போதைய நிலை இதுதான்

உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொல் மூலம் நாட்டுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ரஷிய ராணுவத்தினர் 20 சதவீத நிலப்பரப்பை […]

Continue Reading

இலங்கை ஊரடங்கில் தளர்வு..!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவதுடன், அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப்போட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அமைதியான போராட்டத்தில் கடந்த 9-ந் தேதி வன்முறை வெடித்தது.   பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், நாடு இதுவரை கண்டிராத […]

Continue Reading

ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவை

தீவு நாடான இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.    கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.  இலங்கையில் நிலவி வரும் அசாதாரண […]

Continue Reading

இலங்கையில் வெடிக்கும் வன்முறை – ஐ.நா கண்டனம்

இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்து இலங்கையில் வன்முறை வெடித்தது. […]

Continue Reading

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபாட்ச ராஜிநாமா..!!!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதாக தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் […]

Continue Reading