பிரபல நடிகர் ராமராஜ் அதிர்ச்சி மரணம்

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 72 வயதான, ராமராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்த ராமராஜ்-க்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]

Continue Reading

ரஜினியுடன் நடிக்க தயார்

ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய […]

Continue Reading

கமலின் விக்ரம் படம் எப்படி இருக்கு?

நீண்ட நாள்களுக்கு பிறகு கமல் ஹாசனை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் திரைப்படம் வெளியாகியிருப்பது […]

Continue Reading

பிரபல பாடகர் திடீர் மரணம்

தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் கே.கே மாரடைப்பால் காலமானார். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். எல்லோரும் கே.கே என்று அழைக்கப்படுகிறார்கள். டெல்லியைச் சேர்ந்த இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல முக்கிய இந்திய மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். தமிழில் காக்க காக்க படத்தில் இருந்து உயிரின் உயிரே, அன்னியனில் இருந்து அடங்காக்காரி, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் […]

Continue Reading

பிரபல பாடகி சங்கீதா உடல்நலக்குறைவால் மறைந்தார்

பிரபல திரைப்பட பாடகி சங்கீதா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் இதுவரை, 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல், பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் ஆகும். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த […]

Continue Reading

சிம்புவின் தந்தை டி.ராஜேந்திர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. டி.ராஜேந்தர் தமிழ்த்திரையில் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கியவர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான அவர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, இசையமைப்பாளர், மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் பரிமாணம் கொண்டவர். பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர். இந்நிலையில் அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை […]

Continue Reading

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது. அகிலன் என்று இப்படத்திற்கு […]

Continue Reading

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக  படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Continue Reading

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் […]

Continue Reading

ரஜினியின் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வெளியானது

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று 6 மணிக்கு வெளியாகி சன் […]

Continue Reading