கிராமசபை கூட்டங்கள் இனி 6 முறை நடைபெறும்

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராமசபை கூட்டங்கள் இனி 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவ.1-ம் தேதி‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும் […]

Continue Reading

பிரதமரின் சென்னை வருகை – என்னென்ன நிகழ்ச்சிகள்?

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து […]

Continue Reading

பிரதமர் சென்னை வருகை – தமிழில் ட்வீட் போட்ட ஆளுநர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வரும் நிலையில், அவரை வரவேற்கும் விதமான ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ட்வீட் செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் […]

Continue Reading

தங்க தாலி, சீர்வரிசை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

9 ஏழை ஜோடிகளுக்கும் தலா ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், மிகவும் பாழடைந்து கிடந்த மாநகராட்சி மண்டபத்தை நான் தான் சீரமைத்தேன் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மண்டபம் புனரமைப்புக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை போராடி வாதாடி வென்றோம் […]

Continue Reading

ஓமந்தூராரில் நிறுவப்பட்ட கலைஞர் சிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா […]

Continue Reading

மேட்டூர் அணை திறப்பு – நாடு விடுதலைக்கு பின் இதுவே முதல்முறை

நாடு விடுதலைக்குப் பின் முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை இன்று திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இன்று நீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இந்த ஆண்டு மிக முன்னதாக மே மாதத்தில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வரும் 27ம் தேதி தஞ்சை கல்லணை வந்தடையும். மேட்டூர் அணை திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் […]

Continue Reading

திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதிப்பு – கே.எஸ்.அழகிரி

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது. கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் […]

Continue Reading

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல்கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் […]

Continue Reading

சென்னையில் குறைந்தது தக்காளி விலை..!

சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சமீப நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, நேற்று முன்தினம் ரூ.80 முதல் ரூ.85 வரை மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனை ஆனது. வெளி மார்க்கெட்டுகளில் இதன் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை […]

Continue Reading

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை […]

Continue Reading