”தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தை பராமரிக்கவும்”

தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டத்தில் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பஸ் நிலையத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை புறநகர் தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளை கொண்டது. மொத்தம் ஐந்து மண்டலங்கள் உள்ள இம்மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டம் இன்று பெருங்களத்துாரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மண்டல குழு தலைவர் காமராஜ் ஆணையாளர் இளங்கோவன் மற்றும் மண்டலத்திற்குட்பட்ட 14 […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையிலிருந்து துபாய், தாய்லாந்து நாடுகளுக்கு விமானங்களில் கடத்தமுயன்ற ரூ.50.71 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை,திருச்சியை சோ்ந்த 5 பயணிகளை கைது செய்தனா். விசாரணையில் இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவு கணக்கில் இல்லாத ஹவாலா பணம் விமானம் கடத்தப் படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச […]

Continue Reading

இனி ஹெல்மெட் கட்டாயம் – சென்னை காவல்துறை அதிரடி

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமருகிறவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற நடைமுறை சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிவது […]

Continue Reading

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக பெண்கள் மற்றும் மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., […]

Continue Reading

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த திருநங்கை கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். அதன்பேரில், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (22.10.2019) காலை அப்பகுதியில் கண்காணிப்பு […]

Continue Reading

காவலர் வீரவணக்க நாளைமுன்னிட்டு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் திருவுருவ படத்திற்கு ஏ.கே.விசுவநாதன் அஞ்சலி

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், அவர்கள், பணியின் போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) ஆர்.தினகரன், இ.கா.ப, இணை ஆணையாளர் (வடக்கு) கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப, அண்ணாநகர் துணை ஆணையாளர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப, நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் எம்.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை ஏ.கே.விசுவநாதன் துவக்கி வைத்தார்

வருகிற 27.10.2019 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்கள் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள். அதன்பேரில், சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், அவர்கள் உத்தரவுப்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக, இன்று (18.10.2019) காலை […]

Continue Reading

காவலர் குடும்பத்தினருக்காக பாஸ்போட் முகாம் : ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், அவர்களின் சீரிய முயற்சி காரணமாக காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கான கடவுச்சீட்டு முகாம் (Passport Mela for Police Personnel & their Family) இன்று (18.10.2019) காலை காவல் ஆணையரகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி பி.கே.அசோக் பாபு,ஐ.எப்,எஸ் அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், […]

Continue Reading

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கணியாகுமரியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜாக்ஸன் ஹெர்பி அவர்களின் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் சி.என்.ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் கா.அசுதுல்லா முன்னிலை வகித்தனர். பதிவுத்துறை தலைவரும் குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்., அவர்கள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்

Continue Reading

ஜி.வி. நிறுவனத்தின் மெகா ஆஃபர் – வெண்ணை – நெய் – மரச்செக்கு எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர்சலுகை

திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட் அருகே ஜி.வி.நிறுவனத்தாரின் ஊத்துக்குளி வெண்ணை, நெய் மற்றும் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் விற்பனையானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நல்ல தரத்துடன் தூய்மையான முறையில், இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்க மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுகிறார்கள். உங்கள் ஆரோக்கியம் எங்கள் வாழ்க்கை என்ற சொல்லையே தாரக மந்திரமாக ஜி.வி.நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதத்தில் இங்கு 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் ஒன்றும் வழங்கப்படுகிறது. […]

Continue Reading